மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்2


மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்2
x
தினத்தந்தி 17 Aug 2020 7:35 AM IST (Updated: 17 Aug 2020 7:35 AM IST)
t-max-icont-min-icon

மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல்.

மானூர்,

கேரள மாநிலம் மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில், அங்கு தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 55-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்தனர். இந்த நிலச்சரிவில் சிக்கி, நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நடுப்பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆகியோர் நடுப்பிள்ளையார்குளத்துக்கு சென்று, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட 4 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜலட்சுமி தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மானூர் முன்னாள் சேர்மன் கல்லூர் வேலாயுதம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story