”ஆண்டி என்றாலும் ஓகே..அதிபர் என்றாலும் ஓகே .. ” கலகலப்பாக உரையாற்றிய நித்தியானந்தா
விக்கிபீடியாவை போலவே நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கியுள்ள நித்தியானந்தா தன்னை பற்றிய தகவல்களை எல்லாம் அதில் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார்.
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர்வரும் விநாயகர் சதுர்த்தியன்று அதை முறையாக அறிமுகம் செய்ய இருப்பதாக கூறி வருகிறார்.
இந்த நிலையில் தனது யூ ட்யூப் சேனலில் பேசிய நித்தி, விக்கி பீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். தன்னை ஆண்டி என்றாலும் ஓகே தான், அதிபர் என்றாலும் ஓகே தான் என்றும் கலகலப்பாக பேசியிருக்கிறார்.
Related Tags :
Next Story