சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மசோதாவை கைவிட வேண்டும் -கலெக்டரிடம் மீனவர்கள் மனு
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மசோதாவை கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் வாரம் தோறும் மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனுக்களை கொடுத்தவண்ணம் உள்ளனர். அதன்படி நேற்று மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அனைவரும் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பாத்திமா பாபு, இசக்கிமுத்து மற்றும் மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்த மனுவில், மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு வெளியிட்டு உள்ளது. இந்த வரைவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. விதிகளை மீறுபவர்களுக்கு வெகுமதி அளிக்கிறது. ஒருங்குமுறை தளர்வுகளுக்கு வெகுமதி அளிக்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் பணியை சுற்றுச்சூழல் நிர்வாக பணியாக மாற்றுகிறது. இது கட்டாய சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்து போக செய்கிறது. ஆகையால் இந்த வரைவு மசோதாவை கைவிட வேண்டும். 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகளை தளர்த்து போக செய்வதற்கு எதிராகவும் எங்கள் எதிர்ப்பை பதிவ செய்கிறோம் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஜெகன்மோகன் மக்கள் நலச்சங்க செயலாளர் விஜயராஜ் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோவில்பட்டி நகராட்சி இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே தரை பாலத்தில் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதனால் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ஆகையால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் தடுக்கவும், நகராட்சியில் உள்ள கண்மாய்களில் மழைநீர் சேருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வீரபெருமாள் என்ற காசி (வயது 76) என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளேன். இந்த நிலையில் எனது மகன் என்னை பராமரிக்கவில்லை. எனது சொத்து பத்திரங்கள், மனைவியின் நகைகளை எடுத்துக் கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இதனால் நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறேன். ஆகையால் என்னை காப்பாற்றி என் வீடு மற்றும் சொத்தை மீட்டுத்தர வேண்டும். முதியவர் மற்றும் பெற்றோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க பரிகாரம் வழங்கி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Related Tags :
Next Story