மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் + "||" + Independence Day Celebration

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்
பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி,

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் இணையவழியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி தேசிய கொடியேற்றினார். ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று, தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் விழாவில் பங்கேற்றனர். மழலையர் பிரிவு முதல் 2-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேச தலைவர்களின் வேடம் அணிந்தனர். 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு பொருட்களால் தேசிய கொடியை உருவாக்கினர். 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுதந்திர தினம் குறித்து பேசினர். விழாவில் பங்கேற்ற அனைவரையும் பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.


பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் சேது திருமாறன் தேசிய கொடியேற்றினார். பள்ளி முதல்வர் டேவிட் எம்.எழில்வாணன் முன்னிலை வகித்தார். ஆசிரியை அற்புத தேவகிருபா வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் சுதந்திர தின உரையாற்றினர். ஆசிரியர் இசக்கிநங்கன் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மத்திய மாவட்ட வர்த்தக அணி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் வக்கீல் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தேசிய கொடியேற்றினார்.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்விக்குழுமத்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமை ஆசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை ஆசிரியை க.சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆக்ஸ்போர்டு கல்விக்குழும சட்ட ஆலோசகரும், மதுரை ஐகோர்ட்டு வக்கீலுமான கே.திருமலை தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி, சுதந்திர தின உரையாற்றினார். தேசியக்கொடியின் வண்ணங்களில் புறாக்கள் பறக்க விடப்பட்டன. ஆசிரியை லூர்து அமுதா வரவேற்று பேசினார். சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சவுமியா தேசிய தலைவர்கள் பற்றி பேசினார். ஆசிரியைகள் விக்டோரியா, மாரியம்மாள், சோனியாகாந்தி ஆகியோர் தேச ஒற்றுமை பாடல் பாடினர். ஆசிரியை கோல்டன் பெல்லா கவிதை வாசித்தார். ஆசிரியை தங்கலட்சுமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். ஆசிரியை ஆனந்தஜோதி நன்றி கூறினார்.

திருவேங்கடம் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்புள்ள கொடிக்கம்பத்தில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் செல்வன் ஜீவா தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நகர பஞ்சாயத்து அலுவலக வளாகத்திலும், திருவேங்கடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

வள்ளியூரில் உள்ள நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாக்கள் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தலைவர் முருகேசன் தேசிய கொடியேற்றினார். மேலாண்மை இயக்குனர் தினேஷ்குமார், மேலாளர் தமிழ்செல்வம், இயக்குனர் இசக்கியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர் நகர பா.ஜனதா அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் அனிஸ் மார்த்தாண்டம் தேசிய கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் முருகேசன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

வள்ளியூர் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நகர தலைவர் சீராக் இசக்கியப்பன் தலைமையில், நகர செயலாளர் ஜெய்சன் ஞானராஜ் தேசிய கொடியேற்றினார். மாநில மீனவர் அணி செயலாளர் அல்போன்ஸ் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர் பூங்கா நகர், எஸ்.கே.பி. நகரில் குடியிருப்பு நலச்சங்க தலைவர் பேராசிரியர் காசிபழம் தேசிய கொடியேற்றினார். செயலாளர் சார்லஸ் பெஸ்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கோமதிசங்கர் தேசிய கொடியேற்றினார். விழாவில் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

களக்காடு அருகே சூரங்குடி கிறிஸ்டோபர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா நடந்தது. களக்காடு பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் ஜெபநேசர் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார். கல்லூரி தாளாளர் ஜெ.பிரவீன் கிறிஸ்டோபர், செயலாளர் ஏஞ்சல் பிரவீன், கல்லூரி முதல்வர் ரோஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்ஸன் தேவராஜ், ஜான் சுகுமார் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனர். பின்னர் களக்காடு பாரத ஸ்டேட் வங்கி சார்பில், நாங்குநேரி ரோடு பகுதியில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. களக்காடு செயின்ட் ஜோசப் கல்லூரி தாளாளர் தமிழ்செல்வன் கலந்து கொண்டார்.

நாங்குநேரி யூனியன் திருமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜே.இந்திரா தேசிய கொடியேற்றினார். ஆசிரியர் சிலுவை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் பீட்டர் ஜெகதீஷ் தேசிய கொடியேற்றி, சுதந்திர தின உரையாற்றினார். ஆசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.

சங்கரன்கோவில் வேல்ஸ் பப்ளிக் பள்ளியில் தாளாளர் சண்முகசாமி தேசிய கொடியேற்றினார். பொது மேலாளர் பார்த்திபன், முதல்வர் ஜெயபாரதி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். சண்முகநல்லூர் ஸ்ரீ சுவர்ண வித்யாஷரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முதல்வர் மீனா, சங்கரன்கோவில் நகராட்சியில் ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர் தேசிய கொடியேற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்: கொரோனாவால் களையிழந்த கடைவீதிகள்
இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி தஞ்சையில் கடைவீதிகள் களையிழந்து காணப்பட்டன. பூச்சந்தை மற்றும் அவல், பொரி விற்பனை செய்யும் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
2. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தமிழக முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
3. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
4. விநாயகர் சதுர்த்தி விழா: கோவில், வீடுகளில் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு குமரியில் கொண்டாட்டம்
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோவில்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து மக்கள் வழிபாடு செய்தனர்.
5. சுதந்திர தின விழாவில் இன்ஸ்பெக்டரை மேடைஏற்றி மரியாதை செய்த கலெக்டர்
சுதந்திர தின விழாவில் இன்ஸ்பெக்டரை மேடைஏற்றி கலெக்டர் மரியாதை செய்தார்.