நெல்லை, தென்காசியில் தமிழர் விடுதலை களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசியில் தமிழர் விடுதலை களம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழர் விடுதலை களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவந்தி சுபாஷ் பண்ணையார், மத்திய மாவட்ட செயலாளர் மணிப்பாண்டியன், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெகன் பாண்டியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
பண்ணாடி, காலாடி, வாதிரியார், பள்ளர், குடும்பர், மூப்பர், தேவேந்திரகுலத்தார் ஆகிய 7 பிரிவுகளில் வாழும் சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடவேண்டும். விவசாயி அணைக்கரை முத்து மரணத்தில் தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
இதேபோன்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழர் விடுதலை களம் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் பொதிகை கட்டபொம்மன் தலைமை தாங்கினார்.
ஆதிதிராவிட சமூகத்தின் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை அறிவிக்க தாமதப்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும், மூணாறில் நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டும் கேரள அரசை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காட்டில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சி செய்து வரும் ஐ.ஓ.சி.எஸ். நிறுவனத்தை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் நன்னை முருகேஷ், மாநில துணைத்தலைவர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லாததால், இதில் பங்கேற்ற தமிழர் விடுதலை களம் கட்சியினர் 52 பேரை தென்காசி போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Tags :
Next Story