வசாயில் கல்குவாரியில் மூழ்கிய வாலிபர் மாயம் தேடும் பணி தீவிரம்


வசாயில் கல்குவாரியில் மூழ்கிய வாலிபர் மாயம் தேடும் பணி தீவிரம்
x

வசாயில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய வாலிபர் மாயமானார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

மும்பை,

வசாய் ராஜூவ்லி பகுதியை சோ்ந்தவர் அபிஜித் வான்கடே (வயது20). இவர் நேற்று காலை 6 மணியளவில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடினார். பின்னர் 8.30 மணிக்கு அவர்கள் கால், கையை சுத்தம் செய்ய அருகில் உள்ள கல்குவாரிக்கு சென்றனா். சுமார் 50 ஆடி ஆழம் உள்ள குவாரி மழைநீரால் நிரம்பி இருந்தது. இந்தநிலையில் அபிஜித் நண்பர்களின் எச்சரிக்கையை மீறி குவாரியில் குதித்து குளித்து உள்ளார்.

இதில் குதித்த சில வினாடிகளில் அவர் தண்ணீரில் மாயமானார். இதுகுறித்து நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாா் தீயணைப்பு துறையினருடன் கல்குவாரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் குவாரி தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனா்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வாலிவ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story