விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தடை: கைவினை கலைஞர்கள் வாழ்வாதாரம் இழப்பு
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் கைவினை கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
புதுச்சேரி,
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும்விதமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும், கோவில்களிலும் புதிதாக விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் விநாயகர் சிலை ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விநாயகர் சிலைகளை செய்யும் கைவினை கலைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இதுதொடர்பாக புதுவை கோரிமேடு அருகே உள்ள பட்டானூரை சேர்ந்த கைவினை கலைஞர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
நான் கடந்த 20 வருடங்களாக விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன். வழக்கமாக ஜனவரி மாதத்திலேயே சிலைகளை செய்யும் பணிகளை தொடங்கிவிடுவோம். என்னுடன் ராசிபுரம், சிதம்பரம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர்களும் இந்த பணியில் ஈடுபடுவார்கள்.
கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர்கள் தங்களது ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்கள் தற்போது கட்டிட வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஜனவரி மாதம் தொடங்கி நாங்கள் 20 சிலைகள் செய்தோம். அதன்பின் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சிலைகள் செய்யவில்லை. இதற்காக வாங்கப்பட்ட மூலப்பொருட்களும் (மரவள்ளி மாவு) தற்போது கெட்டுப்போய் உள்ளன.
ஊரடங்கு விரைவில் முடிந்து மீண்டும் தொழிலை செய்யலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போனது. அரசும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளோம்.
வழக்கமாக ஆண்டுதோறும் சுமார் 500 விநாயகர் சிலைகள் செய்வோம். அதனை புதுவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் வாங்கிச் செல்வார்கள். இதன் மூலம் சுமார் ரூ.6 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். அதை வைத்து எங்கள் பிழைப்பை நடத்தி வந்தோம். இப்போது வீட்டு வேலைகளுக்கு சென்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story