கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தல்; வாலிபர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2020 7:07 AM IST (Updated: 18 Aug 2020 7:07 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலிசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாபு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சென்னையில் இருந்து அந்த வழியாக 2 பைகள் மற்றும் ஒரு மூட்டையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தார்.

அந்த மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட 61 குட்கா பாக்கெட்கள் அடங்கிய பெட்டிகள் விற்பனைக்காக கடத்தி செல்வது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னையில் இருந்து மாதர்பாக்கத்திற்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றதாக தாணிப்பூண்டியை சேர்ந்த குமரேசன் (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story