மதுரையில் 136 பேருக்கு கொரோனா - 3 முதியவர்கள் உயிரிழப்பு
மதுரையில் நேற்று 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 3 முதியவர்கள் உயிரிழந்தனர்.
மதுரை,
மதுரையில் நேற்று புதிதாக 136 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 96 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 20 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 16 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். 12 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குணமடைந்தனர். இவர்களுடன் மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது. 1,140 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இதனிடையே மதுரையில் நேற்று ஒரே நாளில் 80, 81, 90 வயது முதியவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை கொரோனாவுக்கு 324 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story