குமரியில் ஒரே நாளில் 209 பேர் கொரோனாவால் பாதிப்பு - புதிய உச்சத்தை தொட்டது
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் நோயால் பாதிக் கப்படுபவர்கள் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளனர்.
தினமும் 100-க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் புதிய உச்சமாக கொரோனா தொற்று 200-ஐ தாண்டியது. தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 699 என்றும் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் நீண்ட நாளைக்கு பிறகு கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அதோடு குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த 3 பேர் நேற்று பரிதாபமாக இறந்தனர். அதாவது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆண்களும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமன்புதூரை சேர்ந்த 90 வயது மூதாட்டியும் பலியாகி இருக்கிறார் கள். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story