குன்றத்தூர் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி


குன்றத்தூர் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 19 Aug 2020 3:45 AM IST (Updated: 18 Aug 2020 11:50 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார். பெண் காயம் அடைந்தார்.

பூந்தமல்லி,

போரூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 27), என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு ஆன்லைனில் வகுப்பு நடத்தி கொண்டிருந்தார். இவரது தோழி ஸ்ரீவிஜயா. நேற்று வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் விக்னேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ஸ்ரீவிஜயா காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

காயம் அடைந்த ஸ்ரீவிஜயா சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story