மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 489 பேருக்கு கொரோனா + "||" + In Tiruvallur district For 489 people in a single day Corona

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 489 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 489 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 489 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 618 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 313 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒரே நாளில் நேற்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்தது. 3 ஆயிரத்து 959 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கரணை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 42 வயது பெண், 6 வயது சிறுமி, 4, 6, வயது சிறுவர்கள் உள்பட 12 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வண்டலூர் ஜி.எஸ்.டி. ரோடு பகுதியில் 2 பெண், 1 ஆண் உள்பட 20 பேர், ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 499 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 18 ஆயிரத்து 402 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்தது. 2,741 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் உள்பட 6 வாலிபர்கள், வளையக்கரணை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், ஒரகடம் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர், படப்பை பகுதியை சேர்ந்த 72 வயது மூதாட்டி உள்பட 10 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 296 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 11 ஆயிரத்து 321 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒரே நாளில் நேற்று 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 186 ஆக உயர்ந்தது. 2,789 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
2. கேரளாவில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 6,324 பேருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6,324 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் - கல்வி அதிகாரி தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 402 பேர் பலி நேற்று ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 402 பேர் பலியாகி உள்ளனர்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டம் கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.