விஷ ஊசிபோட்டு கணவர், 2 குழந்தைகளை கொன்று பெண் டாக்டர் தற்கொலை நாக்பூரில் பயங்கரம்
நாக்பூரில் விஷ ஊசிப்போட்டு கணவர், 2 குழந்தைகளை கொன்ற பெண் டாக்டர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாக்பூர்,
நாக்பூர் கோராடி ஓம் நகரை சேர்ந்தவர் தீரஜ்(வயது42). என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வந்தார். இவரது மனைவி சுஷ்மா(41). டாக்டர். இந்த தம்பதிக்கு 11, 5 வயதுடைய 2 குழந்தைகள் இருந்தனர்.
நேற்று வீட்டில் அவர்களுடன் வசித்து வந்த 60 வயது பெண் தம்பதி, குழந்தைகள் இருந்த படுக்கை அறை வெகுநேரமாக பூட்டப்பட்டு இருந்தை கண்டார். கதவை தட்டி பார்த்தும் எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தனர். அங்கு டாக்டர் சுஷ்மா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் படுக்கையில் அவரது கணவர், 2 குழந்தைகளும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு நடத்திய சோதனையில் ஊசி மருந்து, சிரிஞ்ச் மற்றும் கடிதம் இருந்ததை பறிமுதல் செய்தனர். கடிதத்தில் டாக்டர் சுஷ்மா, வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாக எழுதி இருந்தார்.
போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் டாக்டர் சுஷ்மா தனது கணவர், குழந்தைகளுக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்து உள்ளார். இதனை சாப்பிட்ட 3 பேரும் சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி சரிந்தனர். இதன்பின் அவர் விஷஊசி மருந்தை அவர்களது உடலில் செலுத்தி உள்ளார். இதில் கணவர் உள்பட குழந்தைகள் உயிரிழந்ததை உறுதி செய்தார்.
பின்னர் மின்விசிறியில் டாக்டர் சுஷ்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story