பாகூர், நெட்டப்பாக்கம், அரியாங்குப்பம் கொம்யூனில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு
பாகூர், நெட்டப்பாக்கம், அரியாங்குப்பம் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
பாகூர்,
தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி புதுவை மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் படுக்கை வசதி இல்லாமல் போனதால் புதிதாக தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் வசிக்கம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கையொட்டி நேற்று கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதன்படி பாகூர், நெட்டப்பாக்கம் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளில் கொரோனா பாதித்த 167 கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று கிருமினி நாசினி தெளிக்கப்பட்டது.
பாகூர் கொம்யூன் பகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம், மணபட்டு, குருவிநத்தம், சோரியாங்குப்பம், பாகூர் உள்ளிட்ட பகுதியில் வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கொம்யூன் ஆணையர் மனோகரன் தொடங்கி வைத்தார். இதில் உதவி பொறியாளர் சிவபாலன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியான கரிக்கலாம்பாக்கம், கோர்க்காடு, ஏம்பலம், மடுகரை உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கட்டுப்பாட்டு பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் கிருமிநாசினி பொடி தெளிக்கப்பட்டது. இந்த பணிகளை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், இளநிலை பொறியாளர் சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கவில்லை, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story