மாவட்டத்தில், புதிதாக 30 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில், புதிதாக 30 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Aug 2020 3:00 AM IST (Updated: 19 Aug 2020 7:33 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்தவகையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பசுபதிபாளையத்தை சேர்ந்த 63 வயது முதியவர், சின்னதாராபுரத்தை சேர்ந்த 35 வயது ஆண், 33 வயது பெண், 69 வயது மூதாட்டி, வாங்கலை சேர்ந்த 34 வயது ஆண், 25 வயது ஆண், தோகைமலையை சேர்ந்த 71 வயது மூதாட்டி, அய்யர்மலையை சேர்ந்த 56 வயது ஆண்.

லாலாபேட்டையை சேர்ந்த 58 வயது பெண், தாந்தோணிமலையை சேர்ந்த 56 வயது ஆண், புலியூரை சேர்ந்த 67 வயது முதியவர், சின்னஆண்டாங்கோவிலை சேர்ந்த 65 வயது முதியவர், வெள்ளியணையை சேர்ந்த 55 வயது ஆண், குளித்தலையை சேர்ந்த 65 வயது மூதாட்டி, 60 வயது முதியவர், திருமாநிலையூரை சேர்ந்த 46 வயது ஆண், மாயனூரை சேர்ந்த 65 வயது மூதாட்டி, வெங்கமேட்டை சேர்ந்த 40 வயது ஆண், தளவாபாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண் உள்பட 30 பேர் ஆவர்.

அவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story