தூத்துக்குடியில் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு போலீசார் அஞ்சலி
தூத்துக்குடியில் போலீஸ் காரர் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு போலீசார் அஞ்சலி செலுத்தினார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே தேடப்பட்ட குற்றவாளியை பிடிக்க சென்ற போது, நாட்டு வெடிகுண்டு வீசி போலீஸ்காரர் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் போலீசார், சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், காந்திமதி மற்றும் போலீசார் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர். இதே போன்று தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் போலீஸ்காரர் சுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி 30-வது வார்டு அ.ம.மு.க. சார்பில் போலீஸ்காரர் சுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டூவிபுரத்தில் நடந்தது. வட்ட செயலாளர் காசிலிங்கம் தலைமை தாங்கி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story