சுஷாந்த் சிங் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை: மும்பை போலீசின் நேர்மையை சந்தேகிப்பது, சதி சஞ்சய் ராவத் கூறுகிறார்
சுஷாந்த் சிங் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து இருக்கும் நிலையில், மும்பை போலீசின் நேர்மையை சந்தேகிப்பது ஒரு சதி என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
மும்பை,
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த தற்கொலைக்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்று கூறி பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பீகார் அரசின் கோரிக்கையை ஏற்று சுஷாந்த் சிங் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி அளித்து நேற்று சுப்ரீ்ம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது வலைத்தள பதிவில், “நீதித்துறை அமைப்பில் நம்பிக்கையை அதிகரிக்கும் முடிவு. மராட்டிய அரசு தற்போது இந்த வழக்கை கையாண்ட விதம் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாங்கள் தற்போது சுஷாந்த் சிங் வழக்கிலும், அவரது ரசிகர்களுக்கும் நீதியை எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.
சி.பி.ஐ. விசாரணைக்கு மராட்டிய அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து ஆளும் கட்சியை சேர்ந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்பை போலீஸ் துறையின் நேர்மையை சந்தேகிப்பது ஒரு சதியாகும். அரசியல்வாதிகள் மும்பை போலீசாரின் புகழுக்கு தீங்கு விளைவித்து விட்டார்கள். மும்பை போலீசார் வழக்கை அனைத்து வகையிலும் நியாயமான முறையில் விசாரணை நடத்தினார்கள்.
சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருப்பதால் அரசியல் கருத்தை வெளியிடுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story