ஊசுடு ஏரியில் விழுப்புரம் கலெக்டர் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
பறவைகள் சரணாலயம் அமைய உள்ள ஊசுடு ஏரியில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வானூர்,
புதுச்சேரி- தமிழக எல்லையில் ஊசுடு ஏரி சுமார் 1,150 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தமிழகத்தில் 900 ஏக்கரிலும், புதுவையில் 250 ஏக்கரிலும் அமைந்துள்ளது. இந்த ஏரியில் உள்ள தண்ணீர் தமிழகம்- புதுவை பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. புதுவை அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இங்கு படகுகளும் இயக்கப்படுகின்றன. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் திரும்புவது வழக்கம். எனவே ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்று அப்போது ஆட்சியில் இருந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்பின் அதற்கான பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று மதியம் ஊசுடு ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது வரைபடத்தை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை கண்டறிந்து அதனை உடனடியாக அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் 10 ஏக்கர் இருப்பது தெரியவந்தது. அதனையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர், வன சரக அலுவலர் தர்மலிங்கம், வானூர் தாசில்தார் சங்கரலிங்கம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story