புதுவையில் நடப்பது குறித்து மத்திய அரசுக்கு தகவல்: மக்கள் பாதிக்கப்படும்போது பார்வையாளராக இருக்க முடியாது கவர்னர் கிரண்பெடி வேதனை
கொரோனாவினால் மக்கள் பாதிக்கப்படும்போது தன்னால் பார்வையாளராக இருக்க முடியாது/ புதுவையில் நடப்பது குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கவனக்குறைவின் காரணமாக கொரோனா வைரஸ் பரவுகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. இந்த நேரத்தில் புதிய வாழ்வு, வேலை போன்றவற்றுக்கு புதிய வழிகள் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் முதியவர்களின் உடல் நலத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. வீடுகளில் இருந்து வேலை செய்வது சிறந்தது. ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. தொற்று பரவுவதை கண்டறிய நிறைய மனித சக்தியை செலவழிக்க வேண்டியுள்ளது. தொற்றினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அதிகாரிகளுக்கு நிறைய சவால்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு வேறு சில பொறுப்புகளும் இருக்கிறது.
கொரோனா சிகிச்சை பணியில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக சொல்கிறோம். ஆனால் இதுவரை அதை செய்யவில்லை. அது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை?
தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்த மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இதுதொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரி அறிவுறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதுவை போன்ற சிறிய இடத்தில் இவ்வளவு மருத்துவ கல்லூரிகள் வசதிகள் வேறு எந்த மாநிலத்திலும் இருக்க வாய்ப்பு இல்லை. இவ்வளவு வசதிகள் இருந்தும் அதை ஏன் பயன்படுத்தவில்லை? அதற்கு எனக்கு பதிலும் இல்லை.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியை எடுத்தாலே மற்ற கல்லூரிகள் எல்லாம் தானாக வந்துவிடும். மக்கள் பாதிக்கப்படும்போது ஒரு பார்வையாளராக என்னால் இருக்க முடியாது.
நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கவேண்டிய நாம் இப்போது கீழ்நோக்கி செல்கிறோம். மாநிலத்தின் நிர்வாகி என்ற முறையில் புதுவையில் நடப்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்கவேண்டியது எனது கடமை. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story