‘பேஸ்புக்’கில் பழகி மோசடி: பெண்களிடம் லட்சக்கணக்கில் சுருட்டியவர் சிறையில் அடைப்பு போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய மோசடி நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை,
சென்னை வேப்பேரியை சேர்ந்த திலீப் (வயது 28) என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவரைப்பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கீழ்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் பிரவீன் என்பவரிடம் ஆப்பிள் செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்து விட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விமான பணிப்பெண் வேலை வாங்கி தருவதாக சொல்லி ஏராளமான பெண்களிடமும் பேஸ்புக் மூலம் பழகி இவர் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக ஒரு புகார் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிரியா என்ற பெண், திலீப் மீது ஜாம்பஜார் போலீசில் நகை திருட்டு புகார் கொடுத்துள்ளார். பதிலுக்கு அந்த பெண் மீதும் திலீப் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஒரு முறை சிறைக்கு சென்று வந்துள்ள திலீப், இந்த முறை கோர்ட்டு உத்தரவு அடிப்படையில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story