6 மாத குழந்தை, 11 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
6 மாத குழந்தை மற்றும் 11 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர். இந்த 2 பேருக்கும், அவர்களுடைய தாயால் மறுவாழ்வு கிடைத்து இருக்கிறது.
சென்னை,
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் மொன்டால், சம்யுக்தாகுமாரி தம்பதியினரின் மகன் அபியான்ஷ் மொன்டல். 6 மாத குழந்தையான அபியான்சுக்கு, ‘பிலியரி அட்ரீஷியா’ என்ற அரிய பிறவி கல்லீரல் கோளாறு இருந்தது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை பெற்றோர் சேர்த்தனர். குழந்தை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது கல்லீரல் முற்றிலும் சேதம் அடைந்து, பித்தநாளம் உருவாகாமல் இருந்தது.
அப்பல்லோ கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் இளங்குமரன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், அனைத்து சிக்கல்கள், அவசர நிலைகளை பார்த்து குழந்தையை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர். அதன்படி, நேரடி நன்கொடையாளராக இருந்த குழந்தையின் தாய் சம்யுக்தாகுமாரியிடம் இருந்து கல்லீரல் பெற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர். அந்த குழந்தை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பி இருக்கிறது.
இதேபோல், திருச்சியை சேர்ந்த 11 வயது சிறுமி அஷ்விதாவுக்கும் சிறுநீரக நோயுடன் தொடர்புடைய பிறவி கல்லீரல் கோளாறு இருந்தது. இவருக்கு அங்கு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், தொடர்ந்து அவருடைய உடல்நிலை மோசம் அடைந்து கொண்டே வந்தது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அஷ்விதாவுக்கும், அவருடைய தாய் கீதா கல்லீரல் நன்கொடையாளராக முன்வந்தார். அதனைத்தொடர்ந்து கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் இளங்குமரன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் வசந்தரூபன் ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழுவினர் வெற்றிகரமாக அறுவைசிகிச்சையை செய்து முடித்தனர். சிறுமி அஷ்விதாவுக்கு இந்த சிகிச்சை தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சுகாதார காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் எந்த செலவும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அப்பல்லோ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்ற 6 மாத குழந்தை, 11 வயது சிறுமிக்கு அவர்களுடைய தாயாரால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்து இருக்கிறது.

Related Tags :
Next Story