வாசுதேவநல்லூர் அருகே ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு- அமைச்சர் ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை
வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும்செவலில் ஒண்டிவீரன் நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது நினைவு தூணுக்கு அமைச்சர் ராஜலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வாசுதேவநல்லூர்,
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 249-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அமைந் துள்ள அவரது நினைவு தூணுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட கலெக் டர் அருண் சுந்தர் தயாளன், சங்கரன்கோவில் உதவி கலெக் டர் முருகசெல்வி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், வாசுதேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மூர்த்தி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலையில் ஒண்டிவீரன் நினைவு தூணுக்கு அவரது வாரிசான ஆறுமுகம் தலைமையில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின் பேரில் புளியங்குடி துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் ராம ராஜா தலைமையில் ஒண்டிவீரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் வெள்ளத்துரை, வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் அர்ஜூனன், சங்கரன்கோவில் நகர துணை தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசியில் மங்கம்மா சாலை பகுதியில் ஒண்டிவீரன் உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு சர்வ கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவருணன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், தனுஷ் குமார் எம்.பி., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கணேசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வீரன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்பு செயலாளர் வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவிலில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பஸ்நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கணேசன், இளைஞரணி செயலாளர் தமிழ்வளவன், தூய்மை தொழிலாளர் பேரவை முருகன், இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கருப்பசாமி, மாடசாமி, சேகர், சிவா, ராமர், ராமகேந்திரன், பாலா, முத்துவேல், மாரி, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரிகாலன் நன்றி கூறினார்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள அருளாச்சி என்ற திருமலாபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் மாநில இளம்புலிகள் செயலாளர் தமிழ்வேந்தன், இளம்புலிகள் மாவட்ட செயலாளர் ராஜ்குட்டி, வாசுதேவநல்லூர் ஒன்றிய துணை செயலாளர் சமுத்திரம், அருளாச்சி கிளை செயலாளர் காளிராஜ், சங்கரன்கோவில் ஒன்றிய செய்தி தொடர்பாளர் பொன் வள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாலகிருஷ்ணன், செல்லப்பா மற்றும் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் முத்து, ராமர், செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் ஆகஸ்டு 20-ந் தேதி ஒண்டிவீரன் நினைவுநாள் தமிழக அரசு சார்பிலும், அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகள் சார்பிலும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். தற்போது கொரானா வைரஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் வெளியூர்களை சேர்ந்த பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Related Tags :
Next Story