கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து ரோட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி விவசாயிகள் மறியல் போராட்டம்
குத்தாலம் அருகே அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து ரோட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலையூர்,
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் தாலுகா மங்கநல்லூர் மற்றும் தரங்கம்பாடி தாலுகா எடக்குடி ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கடந்த மாதம் 23-ந் தேதி மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், தற்காலிகமாக ஷெட் அமைத்தால் உடனடியாக கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து மங்கைநல்லூர், எடக்குடியில் தற்காலிகமாக விவசாயிகள் தங்களது சொந்த செலவில் ஷெட் அமைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இடத்தில் அடுக்கிவைத்து இரவு, பகலாக காவல் காத்து வருகின்றனர்.
நெல் மூட்டைகளுடன் சாலைமறியல்
ஆனால் நேற்று வரையில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை மங்கைநல்லூர் மெயின் ரோட்டில் அடுக்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் பேசி உடனடியாக கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை-திருவாரூர் வழிதடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story