திருபுவனம் டாஸ்மாக் கடை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை முன்விரோதத்தில் நடந்ததா? போலீசார் விசாரணை


திருபுவனம் டாஸ்மாக் கடை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை முன்விரோதத்தில் நடந்ததா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Aug 2020 6:23 AM IST (Updated: 21 Aug 2020 6:23 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனம் டாஸ்மாக் கடை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே நடுவக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி சரண்ராஜ் (வயது 30). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு இவர், திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏற முயன்றார்.அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் சரண்ராஜை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதில் சம்பவ இடத்திலேயே சரண்ராஜ் பலியானார்.

முன்விரோதம் காரணமா?

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காங்கேயம்பேட்டையை சேர்ந்த சிலருக்கும், சரண்ராஜுக்கும் இடையேமுன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story