தமிழகத்தில் 2-வது தலைநகரம்: ‘அமைச்சர்கள் கூறியது சொந்த கருத்து’ தர்மபுரியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழகத்தில் 2-வது தலைநகரம் அமைப்பது குறித்து அமைச்சர்கள் கூறிவரும் கருத்து அவர்களுடைய சொந்த கருத்து என்று தர்மபுரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரியில் நேற்று மாலை நடந்த கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆய்வு நடத்தினார். கூட்ட முடிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கருத்துக்கள், கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளேன். உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தொற்றால் தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 1,064 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தொடக்கத்தில் மிகக்குறைவாக இருந்த பாதிப்பு பின்னர் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது உரிய சிகிச்சை பெற்று 868 பேர் வீடு திரும்பி உள்ளனர். இந்த மாவட்டத்தில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் இறந்து உள்ளனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,030 படுக்கைகளும் 3 அரசு மருத்துவமனைகளில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் நோய் தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன. மாவட்டம் முழுவதும் 58 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலம் 93 ஆயிரத்து 415 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பரவல் முடிந்த அளவிற்கு தடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் சிகிச்சை பிரிவு
தர்மபுரி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிட பணிகளும், ரூ.2.54 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு உயர்தர சிகிச்சை பிரிவிற்கான கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 49 ஆயிரத்து 531 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் தகுதியுள்ள 29 ஆயிரத்து 426 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஜெர்தலாவ் கால்வாய் திட்டம், எண்ணேகொல்புதூர் தும்பலஅள்ளி கால்வாய் திட்டம் ஆகியவற்றிற்கு நிலஎடுப்புக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதேபோல் அன்னியாளம்-தூள்செட்டிஏரி கால்வாய் திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரூர் புறவழிச்சாலை திட்டம் ஒகேனக்கல்-பென்னாகரம்-திருப்பத்தூர் இடையே ரூ.25.68 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க திட்டம், சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி இடையே ரூ.297.55 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை விரிவாக்க திட்டம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. சிவாடி-தர்மபுரி இடையே அதியமான்கோட்டையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இதேபோல் வெண்ணாம்பட்டியில் ரூ.11.90 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.
ரூ.450 கோடியில் திட்டம்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கூடுதலாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க ஜல்சக்தி திட்டம் ரூ.450 கோடி மதிப்பில் செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரி கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவுடன் அந்த திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம் பரிசீலிக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் புதிய சட்டக்கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் பணி ரூ.62 கோடியில் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 4,408 சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.84.64 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி தர்மபுரி சிவாடியில் ரூ.911 கோடி மதிப்பில் பெட்ரோலிய எண்ணெய் சந்தைபடுத்தும் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் கருத்து
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1,833 ஏக்கர் தேவைப்படுகிறது. இதில் 925.33 ஏக்கர் அரசு நிலத்தில் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 2,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தமிழகத்தில் 2-வது தலைநகரம் அமைப்பது குறித்து அமைச்சர்கள் கூறிவரும் கருத்து அவர்களுடைய சொந்த கருத்து.
தமிழக அரசு இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. கோவையில் மாநகராட்சி பள்ளியில் இந்தி பாடங்களில் மாணவர் சேர்க்கைக்கு போலியாக விண்ணப்பபடிவங்கள் வெளியிடப்பட்டது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மலர் சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரியில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட உள்ளது. வத்தல்மலையில் சுற்றுலா மையம் அமைக்கும் திட்டம் அரசின் ஆய்வில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மூலம் விசாரித்தேன். அவர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கூறினார்.
அரசு விழா அல்ல
இந்த பேட்டியின் முடிவில் தர்மபுரியில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தன்னை அனுமதிக்கவில்லை என்று தர்மபுரி தி.மு.க. எம்.பி. தெரிவித்து இருப்பது குறித்து நிருபர்கள் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது அரசு விழா அல்ல, கொரோனா கால ஆய்வுக்கூட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த பேட்டியின் போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் மலர்விழி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story