அரசின் திட்டங்களை பெறுவதில் கோவை முன்னணியில் உள்ளது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்
அரசின் திட்டங்களை பெறுவதில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதுடன், தேவையான தளர்வுகளுடன், பொதுமுடக்கத்தை மிகவும் கவனமாக அமல்படுத்தி வருகிறார். பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளை முறையாக அடிக்கடி கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற அரசால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா விழிப்புணர்வு
மாவட்டத்தில் 5,686 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், மக்களிடம் தேவையற்ற அச்சம் தவிர்க்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 321 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதில் கடந்த நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 7,811 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். பல்வேறு நோய் தொடர்பில் இருந்த 217 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 2,130 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தேவைகளின் அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,748 படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனைகளில் 1,950 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் அறிகுறியின்றி பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியா பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 1,920 கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் மொத்தம் 5,618 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள்
தமிழக முதல்-அமைச்சர் அறிவுரையின்படி கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் சிறப்பு முயற்சியாக சித்த மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொடிசியா அரங்கத்தில் அமைக்கப்பட்ட சித்தா முறை சிகிச்சை மையத்தில் 317 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பயனாக 234 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பினை 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் பணியானது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாயிலாக தொகுதியில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இ-பாஸ் முறை எளிமை
தற்போது மாவட்டம் விட்டு பிற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் இ-பாஸ் முறையானது மிகவும் எளிமைப் படுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஒரு பேரிடர் காலங்களில் தமிழக அரசு முழு கவனமுடன் செயல்பட்டு வருவதுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளில் எல்லா வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு மேற்கொண்டு வருகிறது. அரசின் திட்டங்களை பெறுவதில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், நீர் வழித்தடங்கள் புனரமைப்பு, பூங்காக்கள் என அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் குறித்த காலத்துக்கு முன்னதாகவே முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
போர்க்கால நடவடிக்கை
இந்தியாவிலேயே மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்கும் 116 தேசிய விருதுகளை தமிழக அரசு பெற்று உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ் குமார், போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரமேஷ் குமார், கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் காளிதாஸ், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி தனம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story