விழுப்புரம் மாவட்டத்தில் 2 டாக்டர்கள் உள்பட 97 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் 2 அரசு டாக்டர்கள் உள்பட 97 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5,551 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 52 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 4,811 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 688 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த மேலும் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
97 பேருக்கு நோய் தொற்று
இதனிடையே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 400-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 97 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 டாக்டர்கள், பனையூர் அங்கன்வாடி மைய ஆசிரியர், விக்கிரவாண்டி போலீஸ் ஏட்டு, விழுப்புரம் நகர போலீஸ் ஏட்டு, கஞ்சனூர், கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்கள், கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் உள்ளிட்டோரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,648 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 221 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Related Tags :
Next Story