தேனி மாவட்டத்தில் ஆசிரியர் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி தொற்று பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்தது
தேனி மாவட்டத்தில் ஆசிரியர் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது.
தேனி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. தினமும் 200 முதல் 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருந்தது. அவர்களில் 166 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 237 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 9 ஆக அதிகரித்து உள்ளது.
3 பேர் பலி
இதேபோல் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போடியை சேர்ந்த 75 வயது ஓய்வுபெற்ற ஆசிரியர், போடி சுந்தரராஜபுரத்தை சேர்ந்த 51 வயது ஆண், சின்னமனூரை சேர்ந்த 50 வயது பெண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்தது. இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 387 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்காக 1,964 பேரிடம் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story