சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் சிறுபான்மையினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் புதிதாக தொழில்கள் தொடங்கவும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்யவும் கடன் உதவிகள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
இக்கடன் உதவிகள் பெறுவதற்கு வயது வரம்பு 18. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் உதவி வழங்கப்படும். தனி நபர் கடன் திட்டத்தில் சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி கடன், கைவினைஞர் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள், இலகுரக போக்குவரத்து வாகனக் கடன் மற்றும் விவசாயம் தொடர்பான தொழில்கள் ஆகியவற்றிற்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
சுயஉதவிகுழுக்கள்
சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. அதன்படி இக்குழு குறைந்த பட்சம் 6 மாதங்கள் சேமித்தல் மற்றும் உள் கடன் போன்றவற்றில் ஈடுபட்டு இருக்க வேண்டும். சுய உதவிகுழுவின் 60 சதவீதம் அங்கத்தினர்கள் சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும். ஏனைய 40 சதவீத உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இடம் பெற்றிருக்கலாம்.
கடன் திட்டங்களில் மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது. கடன் பெற விண்ணப்பிக்க கடன் விண்ணப்பத்துடன் வருமானசான்றிதழ், சார்ந்துள்ள மதத்திற்கான சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை, இருப்பிட சான்றிதழ், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் நகல் (போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டும்) கூட்டுறவு வங்கி கோரும் ஆவணங்கள் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து சான்றுகளுடன் அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்கலாம்.
இக்கடனுதவிக்கான விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கட்டணமின்றி பெற்று கொள்ளலாம். மேலும் விவரங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல் அரியலூர் கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story