மும்பை, தானே, கொங்கன் பகுதியில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை
மும்பை, தானே, கொங்கன் பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை,
மும்பையில் நேற்று ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் பகுதியான ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாகவும் மும்பை வானிலை ஆய்வு மைய சீனியர் இயக்குனர் சுபாங்கி புதே தெரிவித்து உள்ளார். ஆரஞ்ச் எச்சரிக்கை என்பது கடுமையான வானிலையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் மும்பையையொட்டி பகுதிகளிலும் பலத்த மழை பெய்து உள்ளது. இதில் மாதேரானில் அதிகபட்சமாக 12.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதேபோல அலிபாக்கில் 5 செ.மீ. மழையும், ரத்னகிரியில் 8.4 செ.மீ. மழையும், பால்கரில் 7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மும்பையை பொறுத்தவரை நகரில் 6.3 செ.மீ. மழையும் புறநகரில் 3.2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related Tags :
Next Story