காரைக்காலில் பட்டிமன்ற பேச்சாளர் உள்பட 2 பேர் கொரோனா தொற்றுக்கு பலி
காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள், அறிகுறி உள்ளவர்களிடம் மாவட்ட நலவழித்துறை சார்பில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 7,883 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர் களில் நேற்று முன்தினம் வரை 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கடந்த 19-ந் தேதிகளில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. இதில், 414 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 163 பேர் மாவட்ட அரசு பொதுமருத்துவமனை மற்றும் தங்கள் வீடுகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
காரைக்கால் மாவட்ட அரசு பொதுமருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு இருந்த புதுச்சேரியைச் சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் கோ.சாரங்கபாணி (வயது 80) மற்றும் திரு-பட்டினம் பட்டினச்சேரியைச் சேர்ந்த 52 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காரைக்காலில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 10 பேர் இறந்துள்ளனர்.

Related Tags :
Next Story