டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி கழனிவாசல் வாரச்சந்தை அருகில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கொரோனா தொற்றால் இறக்கும் டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.50லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
பணியாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிகாலத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி கழனிவாசல் வாரச்சந்தை அருகில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிற்சங்கங்களை சேர்ந்த கருப்பசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் அரியகுமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தாளமுத்து, அரசு பணியாளர் சங்க பொறுப்பாளர் நாகரெத்தினம், விற்பனையாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், விடுதலை முன்னணி பொறுப்பாளர் சீனிவாசன், டாஸ்மாக் பணியாளர்கள் சுப்பிரமணியன், கருப்புச்சாமி, முத்துப்பாண்டி, பாரூக், முத்துராமன், தனுஷ்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story