திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு புதிதாக 120 பேருக்கு தொற்று


திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு புதிதாக 120 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 22 Aug 2020 11:17 PM GMT (Updated: 22 Aug 2020 11:17 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,560 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரம் இதுவரை 5,488 பேர் குணம் அடைந்துள்ளனர். 970 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பலி எண்ணிக்கை102 ஆக உயர்வு

திருச்சியில் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 161 பேர் நேற்று பூரண குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள். இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய திருச்சியில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது. இங்கு திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நாளொன்றுக்கு 1,500 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் வரை திருச்சி மாவட்டத்தில் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story