காரைக்காலில் ஒரேநாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 647 ஆக உயர்வு


காரைக்காலில் ஒரேநாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 647 ஆக உயர்வு
x

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 647 ஆக உயர்ந்துள்ளது.

காரைக்கால், 

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மாவட்ட நலவழித்துறை தினமும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி வருகிறது. இதுவரை 8,002 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் நேற்றுமுன்தினம் வரை 587 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த 20-ந் தேதிகளில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

647 ஆக உயர்வு

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 647 ஆக உயர்ந்துள்ளது. இதில் 438 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதி 199 பேர் மாவட்ட அரசு பொது மருத்துவமனை மற்றும் தங்கள் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர். காரைக்காலில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story