திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் உள்பட 70 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி


திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் உள்பட 70 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி
x
தினத்தந்தி 23 Aug 2020 6:35 AM IST (Updated: 23 Aug 2020 6:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் உள்பட 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.அதன்படி, பழங்கரை அவினாசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த 21 வயது பெண், 54 வயது ஆண், குண்டடத்தை சேர்ந்த 37 வயது பெண், 52 வயதுஆண், 40 வயது ஆண், 31 வயது ஆண், அவினாசி அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ உதவியாளரான 34 வயது பெண், செம்பியநல்லுரை சேர்ந்த 27 வயது ஆண், திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 78 வயது ஆண், தாராபுரம் தனியார் நூற்பாலையை சேர்ந்த 24 வயது பெண், 23 வயது பெண், 22 வயது பெண், 18 வயது ஆண், 24 வயது பெண், திருப்பூர் அரிசிக்கடை வீதியை சேர்ந்த 59 வயது ஆண், 15.வேலம்பாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண், தொட்டிய மண்ணரையை சேர்ந்த 50 வயது பெண், எஸ்.வி.காலனியை சேர்ந்த 54 வயது பெண்.

ஊத்துக்குளி எஸ்.பெரியபாளையத்தை சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் ஓடக்காட்டை சேர்ந்த 26 வயது ஆண், மண்ணரை வாத்தியார்தோட்டத்தை சேர்ந்த 55 வயது ஆண், கரட்டாங்காடு மெயின்ரோட்டை சேர்ந்த 54 வயது ஆண், காந்திநகர் ஏ.வி.பி.லேஅவுட்டை சேர்ந்த 68 வயது பெண், எம்.எஸ்.நகரை சேர்ந்த 60 வயது பெண், கணியாம்பூண்டி மதுராநகரை சேர்ந்த 33 வயது பெண், ரங்கநாதபுரத்தை சேர்ந்த 30 வயது ஆண், பாரதிநகர் 2-வது வீதியை சேர்ந்த 36 வயது ஆண், திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த 55 வயது ஆண், வாவிபாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்த 26 வயது ஆண், ஓடக்காடு காவிரி வீதியை சேர்ந்த 48 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பூலுவப்பட்டி

இதுபோல் எஸ்.வி.காலனியை சேர்ந்த 40 வயது ஆண், 68 வயது ஆண், பூலுவப்பட்டி தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த 44 வயது ஆண், பூச்சக்காடு கிரி நகரை சேர்ந்த 24 வயது பெண், அவினாசி சொர்ணபுரி ரிச் லேண்டை சேர்ந்த 50 வயது பெண், நல்லூர் ஸ்ரீநகரை சேர்ந்த 68 வயது ஆண், பவானி நகரை சேர்ந்த 33 வயது ஆண், மலுமிச்சம்பட்டி அம்பாள் நகரை சேர்ந்த 46 வயது பெண், திருப்பூர் எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்த 48 வயது ஆண், எஸ்.வி.காலனி கிழக்கு மெயின்ரோட்டை சேர்ந்த 58 வயது ஆண், விஜயாபுரத்தை சேர்ந்த 77 வயது ஆண், மங்கலத்தை சேர்ந்த 36 வயது ஆண், பல்லடம் சாமளாபுரத்தை சேர்ந்த 44 வயது பெண்.

குடிமங்கலம் வேலாயுதகவுண்டன்புதூரை சேர்ந்த 36 வயது ஆண், உடுமலை நேருவீதியை சேர்ந்த 80 வயது ஆண், 75 வயது ஆண், பெரியாண்டிப்பாளையம் குறிஞ்சிநகரை சேர்ந்த 32 வயது ஆண், மங்கலம் காந்திஜி முதல் வீதியை சேர்ந்த 4 வயது சிறுவன், அவினாசி சாவக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த 24 வயது ஆண், திருப்பூர் தென்னம்பாளையம் தொடக்கப்பள்ளி வீதியை சேர்ந்த 54 வயது ஆண், செட்டிப்பாளையம் டி.பி.என்.கார்டனை சேர்ந்த 48 வயது பெண், 15 வயது பெண், பொங்கலூர் பொடாரம்பாளையத்தை சேர்ந்த 31 வயது பெண், திருப்பூர் எஸ்.வி.காலனி கிழக்கு மெயின் ரோட்டை சேர்ந்த 50 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செட்டிபாளையம்

செட்டிபாளையம் டி.பி.என்.கார்டனை சேர்ந்த 17 வயது ஆண், ராக்கியாபாளையம் பாலாஜி நகரை சேர்ந்த 39 வயது ஆண், வீரபாண்டி ஸ்ரீ சிவசக்தி நகரை சேர்ந்த 41 வயது ஆண், தோட்டத்துப்பாளையம் ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்த 61 வயது ஆண், காட்டன் மார்க்கெட் குப்பண்ண செட்டியார்வீதியை சேர்ந்த 64 வயது ஆண், எஸ்.ஆர்.நகரை சேர்ந்த 30 வயது பெண், காங்கேயம் குட்டப்பாளையத்தை சேர்ந்த 67 வயது பெண், வெள்ளகோவில் உப்பிலிபாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண், திருப்பூர் கே.வி.ஆர்.நகரை சேர்ந்த 25 வயது பெண், கொங்கணகிரியை சேர்ந்த 31 வயது ஆண், முத்துகோபால் நகரை சேர்ந்த 71 வயது ஆண், பல்லடம் மங்கலம் ரோட்டை சேர்ந்த 78 வயது பெண், திருப்பூர் ஷெரீப்காலனியை சேர்ந்த 30 வயது ஆண், மகாலட்சுமி நகரை சேர்ந்த 34 வயது ஆண், உடுமலை காந்தி நகரை சேர்ந்த 59 வயது பெண் என மொத்தம் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,947 ஆக உயர்ந்துள்ளது.

ஒருவர் பலி

இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூரை சேர்ந்த 52 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் காரணமாக கடந்த 12-ந் தேதி கோவை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story