மதுரை ஆரப்பாளையத்தில் மது அருந்தும் போது தகராறு வாலிபர் சரமாரி வெட்டி கொலை


மதுரை ஆரப்பாளையத்தில் மது அருந்தும் போது தகராறு வாலிபர் சரமாரி வெட்டி கொலை
x
தினத்தந்தி 23 Aug 2020 1:37 AM GMT (Updated: 2020-08-23T07:07:44+05:30)

மதுரை ஆரப்பாளையத்தில் மது அருந்தும் போது தகராறு வாலிபர் சரமாரி வெட்டி கொலை.

மதுரை,

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 29). மதுரை மாநகராட்சி கொரோனா ஒழிப்பு பணியில் தினக்கூலி பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ஆரப்பாளையம் வைகை தென்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் கரிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்த பார்த்திபனுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது.

Next Story