முக்கண்ணாமலைப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு


முக்கண்ணாமலைப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 24 Aug 2020 3:45 AM IST (Updated: 24 Aug 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அன்னவாசல்,

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 40). இவரும், இவரது சகோதரர் ராமராஜ் உள்பட நண்பர்கள் சிலர் முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள வாதியார் கிணற்றின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக செல்வராஜ் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

கிணற்றில், தண்ணீர் அதிகமாக இருந்ததால் நண்பர்களால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை. இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார் தலைமையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினர். அவர்களுக்கு உள்ளூர் இளைஞர்களும் உதவி புரிந்தனர்.

சுமார் ஒரு மணி நேர போராடியும் செல்வராஜை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. பின்னர், அன்னவாசல் போலீசார் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செல்வராஜிற்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

Next Story