பவாய் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.27 லட்சம் வைர நகைகள் கொள்ளையடித்த வாலிபர் கைது


பவாய் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.27 லட்சம் வைர நகைகள் கொள்ளையடித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2020 5:07 AM IST (Updated: 25 Aug 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

பவாய் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.27 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஹாரோஷ் (வயது41). தொழில் அதிபர். இவரது வீட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் ரூ.27 லட்சம் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நாலச்சோப்ராவை சேர்ந்த பாபு விஸ்வகர்மா என்ற அஜய் (வயது24) என்பவர் லட்சக்கணக்கான பணத்திற்கு போதை பொருளை வாங்கி பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வாலிபர் கைது

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அஜய் தான் பவாய் அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீர் குழாய் வழியாக ஏறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொள்ளையடித்த நகைகளை மகேந்திரா (30), ராதேஷாம் (42) ஆகிய நகை வியாபாரிகளிடம் அமஜாத் கான் என்ற தரகர் மூலமாக விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளை போன நகைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story