பெங்களூரு ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் அடிப்படை வசதி இல்லை


பெங்களூரு ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் அடிப்படை வசதி இல்லை
x
தினத்தந்தி 25 Aug 2020 5:51 AM IST (Updated: 25 Aug 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் அடிப்படை வசதி இல்லை என்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்ட செல்கின்றன. நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி சென்று விட்டது. கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் முழுவதும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

இதனால் புதிதாக பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பெங்களூருவில் உள்ள கல்வி நிறுவனங்கள் கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே அருகே யடவனஹள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரியும் கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டு உள்ளது.

அரசு நடவடிக்கை

இந்த நிலையில் அந்த பராமரிப்பு மையத்தில் தங்களுக்கு சிற்றுண்டி தரமற்ற முறையில் வழங்குவதாகவும், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், 100 பேருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய இந்த பராமரிப்பு மையத்தில் 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் சிற்றுண்டி தரமானதாக எங்களுக்கு வழங்குவது இல்லை. 300 பேருக்கும் ஒரே இடத்தில் குடிநீர் குடிக்க ஏற்பாடு செய்து உள்ளனர்.

டம்ளர்களும் குறைந்த அளவில் உள்ளன. இதனால் ஒருவர் பயன்படுத்திய டம்ளர்களை தான் நாங்களும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. கழிவறையை கூட சுத்தம் செய்வது இல்லை. மேலும் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், சுகாதாரத்துறையினர் இங்கு தனிமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினோம். அவர்களும் கண்டுகொள்ளவில்லை. கொரோனா பராமரிப்பு மையம் என்ற பெயரில் இங்கு பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. இதனை தடுக்கவும், எங்களுக்கு அடிப்படை வசதி அமைத்து கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். 

Next Story