திருப்பூர் மாவட்டத்தில், ஒரு வயது குழந்தை உள்பட 76 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,099 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
அதன்படி நேற்று தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாவட்ட வாரியாக அதிகளவு பாதிப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் பெரியார்காலனி செந்தில்நகரை சேர்ந்த 47 வயது ஆண், ஷெரிப்காலனியை சேர்ந்த 46 வயது ஆண், மங்கலம் ரோட்டை சேர்ந்த 40 வயது ஆண், கணியாம்பூண்டியை சேர்ந்த 41 வயது ஆண், ராமையாகாலனியை சேர்ந்த 41 வயது பெண், ஷெரிப்காலனியை சேர்ந்த 74 வயது ஆண், ராமையாகாலனியை சேர்ந்த 63 வயது பெண், சென்னிமலைப்பாளையத்தை சேர்ந்த 65 வயது ஆண், ஊத்துக்குளி கஸ்தூரிபாளையத்தை சேர்ந்த 40 வயது பெண், ஜவகர்நகரை சேர்ந்த 38 வயது ஆண், கே.பி.பி.கார்டனை சேர்ந்த 45 வயது ஆண், அவினாசி ராஜன்நகரை சேர்ந்த 30 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 62 வயது பெண், மங்கலத்தை சேர்ந்த 33 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 32 வயது பெண், உடுமலையை சேர்ந்த 59 வயது ஆண், எலையமுத்தூரை சேர்ந்த 80 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 48 வயது ஆண், திருவள்ளூர்நகரை சேர்ந்த 35 வயது பெண், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண், பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்த 26 வயது பெண், ஸ்ரீநகரை சேர்ந்த 50 வயது ஆண், பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்த 33 வயது பெண், கொங்குமெயின்ரோட்டை சேர்ந்த 3 வயது சிறுவன், காளியப்பாநகரை சேர்ந்த 40 வயது ஆண், தென்னம்பாளையத்தை சேர்ந்த 43 வயது ஆண், பாலாஜிநகரை சேர்ந்த 44 வயது ஆண், எம்.எஸ்.நகரை சேர்ந்த 43 வயது ஆண், வேலம்பாளையத்தை சேர்ந்த 40 வயது ஆண், பி.என்.வி.நகரை சேர்ந்த 34 வயது ஆண், பொங்கலூரை சேர்ந்த 42 வயது ஆண், வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த 58 வயது ஆண், பொங்கலூரை சேர்ந்த 39 வயது பெண், குண்டடத்தை சேர்ந்த 63 வயது ஆண், லட்சுமிநகரை சேர்ந்த 56 வயது பெண், காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 34 வயது ஆண், காங்கேயம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த 38 வயது ஆண், மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த 22 வயது பெண், திருநகர் காலனியை சேர்ந்த 33 வயது ஆண், கோம்பைதோட்டத்தை சேர்ந்த 53 வயது பெண்.
வள்ளிபாளையத்தை சேர்ந்த 50 வயது ஆண், ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த 21 வயது ஆண், குளத்துப்புதூரை சேர்ந்த 63 வயது ஆண், காங்கேயம்ரோடு புதூர் ரோட்டை சேர்ந்த 69 வயது ஆண், பல்லடத்தை சேர்ந்த 60 வயது பெண், 37 வயது பெண், காந்திநகரை சேர்ந்த 65 வயது பெண், கணபதிபாளையத்தை சேர்ந்த 60 வயது ஆண், மங்கலம் ரோட்டை சேர்ந்த 58 வயது ஆண், வெள்ளியங்காட்டை சேர்ந்த 38 வயது பெண், திருப்பூரை சேர்ந்த 12 வயது சிறுவன், 38 வயது பெண், வெங்கமேட்டை சேர்ந்த 26 வயது ஆண், அமராவதி குறுக்கு தெருவை சேர்ந்த 7 வயது சிறுவன், 10 வயது சிறுமி, பொன்னையாகநகரை சேர்ந்த 27 வயது பெண், பாரப்பாளையத்தை சேர்ந்த 38 வயது ஆண், வெள்ளிங்காட்டை சேர்ந்த 29 வயது ஆண், வெங்கடேஷ்வராநகரை சேர்ந்த 30 வயது பெண், ஊத்துக்குளி நேரு தெருவை சேர்ந்த 28 வயது பெண், மும்மூர்த்திநகரை சேர்ந்த 82 வயது ஆண், ஸ்ரீகிருஷ்ணாநகரை சேர்ந்த 80 வயது ஆண், எஸ்.வி.காலனியை சேர்ந்த 84 வயது ஆண், தாராபுரம் சின்னக்கடைவீதியை சேர்ந்த 1 வயது குழந்தை, புதிய பஸ் நிலையத்தை சேர்ந்த 31 வயது ஆண், கே.வி.ஆர்.நகரை சேர்ந்த 27 வயது ஆண், அமராவதிநகரை சேர்ந்த 60 வயது ஆண், முதலிபாளையத்தை சேர்ந்த 65 வயது ஆண், தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த 52 வயது பெண், எம்.எஸ்.நகரை சேர்ந்த 43 வயது ஆண், கருவம்பாளையத்தை சேர்ந்த 29 வயது ஆண், ரங்கநாதபுரத்தை சேர்ந்த 40 வயது பெண், 68 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 28 வயது ஆண், ஷெரிப்காலனியை சேர்ந்த 61 வயது ஆண், 44 வயது ஆண் ஆகிய 76 பேருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2ஆயிரத்து 99 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story