மும்மொழி கொள்கையை எதிர்ப்பவர்கள் தமிழை எந்த அளவுக்கு வளர்த்துள்ளார்கள் என்று கூற முடியுமா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
மும்மொழி கொள்கையை எதிர்ப்பவர்கள் தமிழை எந்த அளவுக்கு வளர்த்துள்ளார்கள் என்று கூற முடியுமா? என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதீய ஜனதா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நேற்று நடந்தது. பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணிகள் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர், பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ் பண்பாட்டிற்கும், தேசிய ஒருமைபாட்டிற்கும் எதிரானது பா.ஜ.க என்று ஸ்டாலின் கூறியிருப்பது, தகுதியற்றவர்கள் வழங்கிய சான்றிதழை போன்றது. பா.ஜ.க.வை பற்றி பேச தி.மு.க.வினருக்கோ, ஸ்டாலினுக்கோ தகுதி கிடையாது. இரண்டாவது இடத்திற்குதான் பா.ஜ.க.விற்கும், தி.மு.க. விற்கும் போட்டி என அ.தி.மு.க அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது, அவர்கள் தங்களுடைய கட்சியின் மரியாதையை காப்பாற்றி கொள்வதற்காக கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். எனவே அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை.
2021-ல் பா.ஜ.க அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சியமைக்கும். தேர்தல் கூட்டணி அந்தந்த நேரத்தை பொறுத்தது. அது தேர்தல் நேரத்தில் தான் உறுதியாக சொல்ல முடியும். தற்போது அ.தி.மு.க கூட்டணியில் தான் பா.ஜ.க உள்ளது. நாங்கள் தேர்தல் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். தற்போது இரண்டாம் கட்டமாக தேர்தல் பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு பூத்திற்கும் கமிட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் ஆளுமையுள்ள இரண்டு தலைவர்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது.
மும்மொழி கொள்கையை எதிர்ப்பவர்கள், கடந்த 50 வருடங்களாக இந்தி படிக்காததால் தமிழை எந்த அளவுக்கு வளர்த்துள்ளார்கள் என்று கூற முடியுமா?. தமிழின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் தான், தமிழ்நாட்டில் தமிழே படிக்க வேண்டாம் என்று பள்ளி நடத்துபவர்கள். இதனால் இன்று கிராமப்புற திருமண அழைப்பிதழ்கள் கூட ஆங்கிலத்திற்கு மாறிவிட்டது. அதில் தமிழ் இல்லை. இதெல்லாம் யாருக்கு பெருமை.
இன்றைய சூழலில் மாணவர்கள் படிக்க விரும்புவதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளில் தமிழர்கள் அதிகப்படியாக வெற்றி பெற்று பணியாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கு தக்கபடி நாம் சிந்தித்து உழைத்து முன்னுக்கு வர வேண்டும். இன்று தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி, அனைத்து கட்சிகளும் அச்சப்படும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கோட்ட இணை அமைப்பாளர் ராஜா, தெற்கு மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாநில மகளிரணி பொதுசெயலாளர் நெல்லையம்மாள், திருச்செந்தூர் நகர் மண்டல தலைவர் சரவணன், இளைஞரணி ஐயப்பன் உள்ளிட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story