ரவுடியை பிடிக்க சென்றபோது படுகொலை: போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல் ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்
ரவுடியை பிடிக்க சென்றபோது படுகொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண்டாரவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 26). போலீஸ்காரரான இவர், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் தனிப்பிரிவில் பணியாற்றி வந்தார். ஏரல் அருகே உள்ள மேலமங்கலகுறிச்சியில் 2018-ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி துரைமுத்துவை பிடிக்கும் தனிப்படையில் சுப்பிரமணியன் இடம் பெற்று இருந்தார்.
கடந்த 18-ந்தேதி வல்லநாட்டை அடுத்த மணக்கரை மலையடிவார பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் துரைமுத்து பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை பிடிப்பதற்காக அங்கு தனிப்படையினர் சென்றபோது துரைமுத்து வீசிய நாட்டு வெடிகுண்டு போலீஸ்காரர் சுப்பிரமணியனின் தலையில் விழுந்து வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி, வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், சுப்பிரமணியன் மனைவியிடம் ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளை இந்திராநகரை சேர்ந்த உச்சிமாகாளியின் மகள் முத்தார் (வயது 7) கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டார். உச்சிமாகாளி குடும்பத்தினரையும் கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், உச்சிமாகாளிக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story