அம்பை பகுதியில் பலத்த மழையால் நனைந்த நெல் மூட்டைகள்
அம்பை பகுதியில் பலத்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்தன.
அம்பை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சில நாட்களாக நீடித்து வந்த வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மணிமுத்தாறு, வைராவிக்குளம், பாப்பான்குளம், அயன்சிங்கப்பட்டி, ஜமீன் சிங்கப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு தீவிரமாக அறுவடை நடந்து வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் நெல் அனைத்தும் அயன் சிங்கப்பட்டியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. சமுதாய நலக்கூடம் சிறிய கட்டிடம் என்பதால் வெளிப்பகுதியில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் குவியல் குவியலாக மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ளது. கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 2000 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டிய நிலையில் 300 முதல் 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் கொள்முதல் செய்யப்படும் அளவுக்கு அதிகமாக விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்ததால் திறந்த வெளியில் அடுக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை வட்டாட்சியர் நெல் மூட்டைகள் நனையாமல் அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். மேலும் மழையில் நனைந்த நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Tags :
Next Story