நெல்லை மாவட்டத்தில் கிராமங்களில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.30 கோடி ஒதுக்கீடு அதிகாரி தகவல்
நெல்லை மாவட்டத்தில் கிராமங்களில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.
நெல்லை,
மத்திய அரசு அனைத்து கிராமப்புற மக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் 1,337 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 3 லட்சம் குடிநீர் இணைப்புகள் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு 53 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. தற்போது இந்த ஆண்டுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. அதன்பிறகு பணி தொடங்கும். இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரத்து 700 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பணி அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.
அதன்பிறகு விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் முழுவதும் நிறைவு பெற்றால், தெருக்குழாய்களில் தண்ணீர் பிடிக்க பொதுமக்கள் வர வேண்டிய அவசியம் இருக்காது. வீதிகளில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படாது. அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியும். மத்திய அரசின் திட்டத்தை கண்காணிக்க கலெக்டர், திட்ட இயக்குனர், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கிராம அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 2 பேர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த பணியை கண்காணிப்பார்கள்.
கொரோனா காலத்திலும் நெல்லை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தினந்தோறும் 29 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு தினக்கூலியாக ரூ.240 வழங்கப்படுகிறது. கடந்த 6 மாதத்தில் ரூ.100 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story