புதிய பதவி ஏற்ற 8 மாதத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி துக்காராம் முண்டே மீண்டும் இடமாற்றம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி துக்காராம் முண்டே மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்று மக்களிடையே நன்மதிப்பை பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி துக்காராம் முண்டே. நேர்மையாக செயல்படுவதால் இவருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் எப்போதும் ஒத்துப்போவது இல்லை. இதன் காரணமாக பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் நவிமும்பை மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது அங்குள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து இவருக்கு எதிராக நவிமும்பை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லா கட்சி கவுன்சிலர்களும் அவருக்கு எதிராக வாக்களித்தனர். எனினும் பொது மக்கள் துக்காராம் முண்டேக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் அவரது இட மாற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இவ்வாறு பல மாறுதலுக்கு பின்பு தற்போது நாக்பூர் மாநகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்தார். இங்கும் அவரது அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்ததால், இங்கும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிட்டது. இந்த நிலையில் அவர் பதவி ஏற்ற 8 மாதத்தில் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் உள்ள மராட்டிய ஜீவன் பிராதிகரனின் உறுப்பினர் செயலாளராக துக்காராம் முண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பதில் சந்திரகிருஷ்ணன் என்பவர் நாக்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். துக்காராம் முண்டேவுடன் சேர்ந்து 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ள துக்காராம் முண்டே தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story