பென்னாத்தூர் பகுதியில் கருகி வரும் மணிலா செடிகள் - விவசாயிகள் கவலை


பென்னாத்தூர் பகுதியில் கருகி வரும் மணிலா செடிகள் - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 27 Aug 2020 3:45 AM IST (Updated: 27 Aug 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் பகுதியில் தண்ணீரின்றி மணிலா பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மணிலா விதைகளை விதைத்தனர், தற்போது காய் உற்பத்தியாகும் காலமாகும். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்யாததால் செடிகள் கருகி கருகி வருகிறது. இனி மழை பெய்தாலும் 25 சதவீதம் கூட பயிர் காய்க்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூன், ஜூலை மாதங்களில் வேளாண்மை துறை வழிகாட்டுதலின்படி பயிருக்கு காப்பீடு கம்பெனி மூலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.504 காப்பீடு பிரீமியத்தை 75 சதவீத விவசாயிகள் செலுத்தியுள்ளனர். ஒரு கிலோ விதை பயிர் ரூ.100-க்கு வாங்கி விதைத்துள்ளனர். தற்போது பருவமழை இல்லாததாலும் பயிர்கள் கருகி வருவதாலும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மணிலா பயிர்கள் கருகி ருவருவதால் விவநசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்..

இது குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் மாநிலக் குழு உறுப்பினரும், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க செயலாளருமான கணியாம்பூண்டியை சேர்ந்த ஆர்.வரதராஜன் கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை இணை இயக்குனர், தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர், புள்ளியியல் துறை அதிகாரி ஆகியோர்களுக்கு தனித்தனியே கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதில் “வேடநத்தம், கரிக்கலாம்பாடி, மானாவரம், கருங்காலி குப்பம் உள்பட 45 வருவாய் கிராமங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காய்ந்த மணிலா பயிருக்கு முழு காப்பீடு, இழப்பீடு தொகை மற்றும் அரசு மூலம் வறட்சி நிவாரணம் பெற்றுத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Next Story