குமரி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தொட்டது - நேற்று 159 பேருக்கு தொற்று
குமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 159 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தொட்டது.
நாகர்கோவில்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. அதே போல குமரி மாவட்டத்திலும் நோய் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 159 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8994 ஆக உயர்ந்து 9 ஆயிரத்தை தொட்டது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி, கொரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 166 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். அதிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 பேர் பலியானார்கள்
ஆனால் நேற்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று தான் குமரி மாவட்டத்தில் கொரோனா பலி இல்லை. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story