தென்காசி ரேஷன் கடையில் இலவச முககவசம்: செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


தென்காசி ரேஷன் கடையில் இலவச முககவசம்: செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Aug 2020 4:00 AM IST (Updated: 28 Aug 2020 12:44 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தென்காசி,

பொதுமக்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய காரணங்களுக்கு வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக பொதுமக்களுக்கு இலவசமாக அரசு முககவசம் வழங்குகிறது. இவற்றை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி ரேஷன் கடைகளில் முககவசம் வழங்கப்படுகிறது.

ஒரு நபருக்கு 2 முககவசங்கள் வழங்கப்படுகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி தென்காசி ஒப்பனை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தென்காசி-செங்கோட்டை தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் உச்சிமாகாளி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. நகர செயலாளர் சுடலை வரவேற்றார். இலவச முககவசங்களை செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க மேலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

Next Story