கடல் நீரோட்ட வேகத்தால் அரிச்சல்முனையில் தடுப்புச்சுவர், நடைபாதை சேதம்
கடல் நீரோட்ட வேகத்தால் அரிச்சல்முனையில் தடுப்புச்சுவர், நடைபாதை சேதமடைந்து வருகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி பகுதி. இங்கு கடல் நீரோட்டம் மற்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். தற்போது கடல் நீரோட்ட வேகத்தால் அரிச்சல்முனை சாலையை சுற்றி மணல் பரப்பாக காணப்பட்ட பகுதி முழுவதும் கடல் நீரால் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் தொடர்ந்து கடல் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்து வருகிறது.கடல் நீரோட்ட வேகத்தால் அரிச்சல்முனையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர் 2 இடங்களில் கீறல் விழுந்து சேதமாகி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையும் சேதமாகி உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஊரடங்கால் கடந்த 4 மாதத்திற்குமேல் தனுஷ்கோடி கம்பிபாடு மற்றும் அரிச்சல்முனை பகுதி சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே சேதமான தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story