நாமக்கல், திருச்செங்கோட்டில், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல், திருச்செங்கோட்டில், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2020 3:45 AM IST (Updated: 29 Aug 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல், திருச்செங்கோட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்செங்கோடு, 

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு போதிய பயிற்சிகள் கிடைக்காத இந்த சூழலில் நீட் தேர்வை மாணவர்களால் சிறப்பாக எதிர்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன், ராசிபுரம் நகர தலைவர் முரளி, நாமக்கல் நகர செயலாளர் குப்புசாமி, வட்டார தலைவர்கள் இளங்கோ, குப்புசாமி, தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகன், நகர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் ஜபருல்லா, மோகனூர் பேரூர் தலைவர் சிங்காரம், நகர துணை தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருச்செங்கோடு நகர காங்கிரஸ் மற்றும் மேற்கு மாவட்ட பஞ்சாயத்துராஜ் சங்கம் சார்பில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாநில கூடுதல் செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் மெய்ஞானமூர்த்தி, நெசவாளர் அணி தலைவர் இளங்கோவன், நகர துணைத்தலைவர் காசி, வட்டார துணைத்தலைவர் குணசேகரன், திருமலை, நகர பொருளாளர் சிங்காரவேல், நகர பொதுச்செயலாளர் சந்திரன், 15-வது வார்டு தலைவர் பாலன், 17-வது வார்டு சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். முடிவில் நகர காங்கிரஸ் துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story